எங்களை பற்றி

  • போதகர்
  • குடும்பம்
  • இரட்சிப்பு
  • ஊழியம்

Image 01 போதகர். எம்.ஜெ.வெஸ்லி நான் "கிங் ஆப் குளோரி மினிஸ்டரி டிரஸ்ட் " என்ற பெயரில் ( மகிமையன் ராஜா ஊழியங்கள்) சேலத்தினை மையமாக வைத்து (தலைமையகமாக தமிழ்நாட்டில் )சேலம் மாநகரில் அமைந்துள்ளது.

 

இதன் முதன்மை நோக்கம், தமிழ் நாட்டிலும் அதன் வெளியிலும் சுவிசேவும் அறிவித்தல்முலமாகவும், ஏழைகளுக்கு உதவி செய்தும் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுவது.

அநேக திட்டங்கள் மூலம் சமூக பணி செய்து, உதராணமாக ,தையல் பயிற்சி மையங்கள், பள்ளி கூடங்கள், மருத்துவமனைகள்,இயற்கை பேரழிவு சமயங்களில் உதவி செய்வது மேலும் அநேக கிராம - நகர்புறங்களில் சபைகள் ஸ்தாபித்து தேவ ராஜ்ஜியத்தை கிட்ட ஆவலுடன் இருக்கிறார்.

 

தற்போது இவர் (1) சிறுவர் ஊழியம் (2) கிராமஊழியம (3) தொலைபேசி (4) ஆலோசனை ஊழியம (5) உபவாச ஜெபம் (6) சரீர சுகமளிக்கும் கூட்டம் (7 ) அக்கினி முகாம் (8)சபை ஊழியம (9) ஜெப ஆலோசனை வழங்கிடல் (10) கிறிஸ்தவ தகவல் ஊழியம் (11) திறந்த வெளி சுவிஷே ஊழியம் (12) மாதப் பத்திரிக்கை போன்ற 12 வகையான ஊழியங்களை நடத்துகிறார்.

 

 

 

என் குடும்ப விபரங்கள்
   

(மறைந்த) திரு.மோசஸ்ஜான் மற்றும் திருமதி.நகோமி மோசஸ்ஜான் அவர்களின் ஒரே மகன் நான். எனக்கு (1) திருமதி.வசுமதி செளந்தர்ராஜன், (2)திருமதி.கவிதா ஜான் சத்திய சாலமோன் (3) திருமதி. காஞ்சனா ஜெயரூபன் என்று தங்கைமார் உண்டு. எனக்கு திருமணமாகி திருமதி பெர்னிஷ் பபிதா தேவ குமாரி என்ற மனைவியும் குமாரி. வே.ஆலிஸ் ஜாய்ஸ் எப்சிபா என்ற மகளும் இருக்கிறார்கள். என் தகப்பனார் மாவட்ட கருவூலகத்தில் கணக்கு பிரிவில் அரசாங்க வேலையில் இருந்தார். மேலும் சேலம் சி.எஸ்.ஐ கிளை சபைகளான ஆத்தூர், வாழப்பாடி,சுக்கம்பட்டி கருமந்துறை மற்றும் முத்தம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்று ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார். எனது தாயார் ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியை. சிறு வியாதியின் காரணமாக என் தகப்பனார் 51 வயதில் (12.101993 ஆண்டில் ) தன் மனைவியையும் 3 பிள்ளைகளையும் விட்டு இறந்து போனார். பிள்ளைகள் படித்து கொண்டும் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்த எங்களை தன்அயராத உழைப்பாலும், ஜெபத்தாலும் தற்போதுள்ள நல்ல நிலைமையை நாங்கள் அடைய என் தாயார்தான் காரணம், கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக .

எனது இரட்சிப்பின் அனுபவம் பற்றி:-
எனது தகப்பனார் மிகவும் கவலைக்கிடமாக வியாதி படுிக்கையில் இருந்த போது,எனது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கவன சிதறலாகி போனதால் எனது டிப்ளமோ படிப்பில் ( DECE ), ஒரு சில பாடங்களில் தோல்வியுற்றேன். ஆகவே மனதில் மிகவும் வேதனையுற்று, மன உளைச்சலுடன் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுமோ என்ற பய உணர்ச்சியுடன் தற்கொலை முயற்சி 3 முறை துணிந்தும், மன நிம்மதி இல்லாமல் போனேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் என் மனதின் ஆழத்தில் என் தகப்பனார் செய்த ஊழியத்தை தொடர வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் இருந்தாலும், என் தகப்பனார் என்னை ஒரு பொறியாளராக (Engineer ) பார்க்க நினைத்தாரே என்ற எண்ணம் என்னை ஊழிராகாமல் தடுத்து வந்தது.

இப்படி இருதலை கொல்லி நெருப்பாக என் நிலை இருக்கையில் நான் தேவனிடத்தில் " அவருடைய சித்தம் என் வாழ்வில் செய்யப்பட வேண்டும்" என் ஜெபிக்க ஆரம்பித்தேன்,தே்வனிிடத்தில் ஒரு பொருத்தனையாக எனது டிப்ளமோ ( DECE ) படிப்பை முடிக்க தேவன் உதவிசெய்தால் ஊழியத்திற்கு என்னை ஒப்புக் கொடுப்பதாக - ஒப்புக் கொடுத்து ஜெபித்தேன். எனது ஜெபத்தைக் கேட்டு எனது டிப்ளமோ ( DECE ) படிப்பை செய்த பொருத்தனை படி நான் தேவனுடைய ஊழியத்துக்கு வந்தேன்.

 

தேவன் " இளம் பிராயத்தில் விவாகஞ் செய்து, தள்ளப்பட்ட மனைவியைப் போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார்" (ஏசாயா 54:6)ல் உள்ள வசனத்தினையும் " உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நிங்கள் விடுதலையாக்கப்பட்டு உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாக பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ் செய்யக் கட்டளையிடுவேன்" (லூக்கா 1:17) எனற வசனத்தையும் கொடுத்து எனது அழைப்பை உறுதிப் படுத்தினார்.

ழியம் ஆரம்பிக்கப்பட்ட விபரம்:-


              மதிப்பிற்குரிய அன்பின் அப்போஸ்தலர் காலஞ் சென்ற சகோ.டி.ஜி.எஸ்.தினகரன் அவர்கள் பெங்களூர் பட்டிணத்தில் இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மூலம் நடத்திய " வல்லமை ஊழியர் பயிற்சி முகாம்: கலந்து கொள்ள. தேவன் (2002) ஆண்டு உதவி செய்தார்.அவர் எங்களை பரிசுத்த ஆவியின் வரங்களை பெற்று, பரிசுத்த ஆவியின் கனிகள் எப்படி செயல்படுத்துவது, என்றும் அவைகளை கொண்டு ஊஜியத்தில் - குடும்பத்தில் ஆவிக்குரிய ஆசிர்வாதங்களை பெற்று சாட்சியாக வாழ்வதையும், உலக மக்களுக்கு எப்படி பிரயோஜமாயிருக்க முடியும் என்கிற அநேக சத்தியங்களையும் பயிற்றுவித்தார். அவர் என் தலையில் கைவத்து ஜெபித்த போது தேவ ஆவிகளினால் நிறைந்து ஏசாயா 60 : 1, மாற்கு 16 : 15 ஏசாயா 61 : 1 -3

ஆகிய வசனங்களை வெளிப்படுத்தி " நானே உன் நம்பிக்கையின் தேவனாயிருந்து பலத்த அற்புதங்களை செய்வேன்" என்று அருள்நாதரின் வார்த்தைகளை எனக்கு கூறினார். நான் 2002 முதல் 2005 வரையிலும் சேலம் இயேசு அழைக்கிறார் மிஷன் நெட் வொர்க் கமிட்டியில் (சரீர சுகமளிக்கும் கூட்டம்) சில முக்கிய பொறுப்புகளை தன்னார்வமாக செய்து வந்தேன். 2005 அகஸ்டு மாதம் நான் ஜெபித்து கொண்டு இருந்த போது நீ விரைவில் எசேக்கியேல் 38: 7 ன் படி உனக்கு நான் ஒரு ஊழியத்தை கொடுப்பேன் அது என் மகிமையை வெளிப் படுத்து ஊழியமாக இருக்கும் அந்த ஊழியத்தின் பெயர் " மகிமையின் ராஜா உழியங்கள்" (king of Glory ministries) என்றார். பிறகு அதே ஆண்டில் செப்டம்பர் 15ம் தேதி சேலத்தில் எனது விட்டில் 7 பேர் கொண்ட ஜெப குழுவை கூட்டி சேர்த்து சங்கீதம் 24 : 9 ன்படி மேற்கண்ட தலைப்பில் முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு B.D( Bachelor of Divinity) ் படிப்பை நான் முறைப்படி 3, 1/2 ஆண்டுகள் பயின்றேன்.

தேவ ஊழியத்தை எனக்கு வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் மேய்ப்பர் மற்றும் சுவிசேஷங்கள் அழைப்பினை கொண்டு சேலத்திலும் அதில் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஊழியம செய்ய ஆரம்பித்தேன்,

நான் 1999 முதல் 2008 - ம் ஆண்டு வரை பகுதி நேரமாக இறைப்பணியை வேலை செய்து கொண்டு ஊழியம் செய்தேன். 9 ஆண்டுகளாக நல்ல பயிற்சிகள் / அனுபவங்கள் கிடைத்து. 2008 - ம ஆண்டு ஏபரல் மாதம் முழுநேரமாக செய்து வந்த தொழிலைவிட்டு ஊழியத்திற்கு வந்தேன். தற்சமயம் 2013ம ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் மகிமையின் ராஜா ஜெப மையத்தை மாத வாடகை கொடுத்து ஆத்தும ஆதாயப் பணியாக இறைபணி செய்கிறேன். இதே ஜெப மையத்தில்தான் அதன் நிர்வாக அலுவலகமும் இயங்கி வருகிறது.

 

 

 

 

Image 01

போதகரை பற்றி

போதகர். எம்.ஜெ.வெஸ்லி ஊழியத்தின் பெயர் "கிங் ஆப் குளோரி மினிஸ்டரி டிரஸ்ட் " ... மேலும்

Image 02

ஜெப மையம்

தேவனிடமிருந்து தேவ வார்த்தை எசேக்கியேல் 38:7ன் படி

... மேலும்

Image 03

தரிசனம் & செயல்நோக்கம்

அத்தும ஆதாயப் பணிசேலம் பகுதி மையமாக கொண்டு உள்ளும் புறம்பும் ... மேலும்

Image 04

செயல்பாடுகள்

ஜெபத்தின் மூலம் தேவையுள்ளவருக்கு உதவி செய்தல், சுவிசேவும் அறிவித்தல் ... மேலும்

Image 05

படத் தொகுப்பு

"கிங் ஆப் குளோரி மினிஸ்டரி டிரஸ்ட் " ஊழியத்தின் படத்தொகுப்பு ... மேலும